»   »  எம்.எஸ்.வி என்ற அறிவுஜீவியை இழந்து விட்டோம் - ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்

எம்.எஸ்.வி என்ற அறிவுஜீவியை இழந்து விட்டோம் - ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார், அவரின் இறப்பு எம்.எஸ்.வியின் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எஸ்.வியின் மறைவு குறித்து ஏராளாமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர், அவரின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னும் ரீதியில் ரசிகர்களின் கருத்துக்கள் அமைந்து உள்ளன.

ரசிகர்கள் தவிர தமிழ்த் திரையுலகைச் சார்ந்த திரை நட்சத்திரங்களும் தங்களின் வருத்தங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அவர்களில் ஒருசிலரின் பதிவுகளை இங்கு பார்க்கலாம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – வண்ணமயமான பாடல்கள்

எம்.எஸ்.வி அவர்கள் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தகுந்த பல வண்ணமயமான பாடல்களை அளித்து இருக்கிறார், இசையுலகின் அறிவுஜீவி ஒருவரை நாம் இழந்துவிட்டோம். அவர் ஆன்மா நிம்மதி அடைய எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும், என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எம்.எஸ்.வியின் இறப்பு குறித்த தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இசையுலகின் மிகப்பெரிய இழப்பு – ஜெயம்ரவி

இசையுலகின் மிகப்பெரிய இழப்பாக உங்கள் மறைவு அமைந்து இருக்கிறது, உங்கள் இசையின் வழியாக நீங்கள் என்றும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் சார் என்று நடிகர் ஜெயம் ரவி பதிவு செய்து இருக்கிறார்.

இசையுலகின் மிகச்சிறந்த ஒருவரின் இழப்பு – சுருதிஹாசன்

இசையுலகின் மிகச்சிறந்த ஒருவரை இன்று நம் இழந்துவிட்டோம். யார் யாரின் தாக்கமோ என்னிடம் இருக்கிறது ஆனால் எம்.எஸ்.வி சாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட அவர் மீது ஒரு மரியாதை இருக்கின்றது என்று நடிகை சுருதிஹாசன் கூறியிருக்கிறார்.

உங்களின் ஆன்மா அமைதி பெறட்டும் – சிவகார்த்திகேயன்

எம்.எஸ்.வி சார் உங்களின் ஆன்மா அமைதி பெறட்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன், தனது வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார்.

அமைதியாக ஓய்வெடுங்கள் – தனுஷ்

எம்.எஸ்.வி சார் நீங்கள் அமைதியாக ஓய்வெடுங்கள் என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.

காலம் மாறிப் போனாலும் – மதன் கார்க்கி

காலம் மாறிப் போனாலும் உங்கள் இசை என்றும் எங்களோடு இருக்கும் என்று, எம்.எஸ்.வியின் பாடல் ஒன்றை அவருக்கு அர்ப்பணித்து இருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

இந்திய சினிமாவின் உண்மையான ஜாம்பவான் – ஜி.வி.பிரகாஷ்

இந்திய சினிமாவின் உண்மையான ஜாம்பவான் நீங்கள் தான் சார், உங்கள் பாடல்கள் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும். நாங்கள் உங்களை இழந்து விட்டோம் என்று வருந்தி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

வண்ணமயமான இசைக்கு நன்றி – நகுல்

தமிழ் சினிமாவை உங்கள் இசையால் வண்ணமயமாய் மாற்றி விட்டீர்கள், அதற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் நகுல் குறிப்பிட்டு இருக்கிறார்.

இசை பயணம் தொடரும் – விவேக்

எம்.எஸ்.வியுடன் மிகவும் நெருக்கம் கொண்ட நடிகர் விவேக் அவர்கள் உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம், ஆனால் இசை பயணம் தொடரும் என்று தமிழில் மிகவும் அழகாக எம்.எஸ்.வியின் இறப்பைப் பதிவு செய்து இருக்கிறார்.

English summary
Today Yearly Morning Music Composer M.S.Viswanathan Passed Away- Celebrities twitter Comments.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil