»   »  எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமா?.. ரஜினி, கமலையும் உயரத்திற்குக் கொண்டு போனவர் எம்.எஸ்.வி...

எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமா?.. ரஜினி, கமலையும் உயரத்திற்குக் கொண்டு போனவர் எம்.எஸ்.வி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்ற சிறப்புடன் வலம் வந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று காலமானார்.

எம்.எஸ்.வி...கடந்து போன நூற்றாண்டுகளின் ஆகச் சிறந்த இசைக்கலைஞர்.. மெல்லிசைக்கென்றே பெயர் போனவர். 80 களில் முளைத்து வந்த நடிகர்களான உலக நாயகனுக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இவர்.

அக்காலத்திலேயே குத்து பாட்டு போன்ற ராப் இசைப்பாடல்களையும் தமிழுக்கு வழங்கிய பெருமை எம்.எஸ்.வியையே சேரும். கமலுக்கும், ரஜினிக்கும் அவர் இசையமைத்த சில சிறந்த பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே...

முதலில் சூப்பர் ஸ்டார்:

முதலில் சூப்பர் ஸ்டார்:

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்த் முக்கால் வாசி இவருடைய இசையில் வந்த பாடல்களுக்குத்தான் வாய் அசைத்திருப்பார்.

தில்லு முல்லு தில்லு முல்லு:

தில்லு முல்லு தில்லு முல்லு:

ரஜினி காந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த காமெடி கலந்த திரைப்படம் "தில்லு முல்லு".. இந்தப் படத்தில் மென்மையான "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" முதல் ஜாலியான "தில்லு முல்லு தில்லு முல்லு" பாடல் வரை அசத்தியிருப்பார் எம்.எஸ்.வி. இன்று வரை காதுகளில் நீங்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று இது.

நான் பொல்லாதவன்:

நான் பொல்லாதவன்:

அடுத்த படம் ரஜினிகாந்த், லட்சுமி, ஸ்ரீ பிரியா நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம். இப்படத்தில் ஒரு பணக்கார ரவுடி போன்ற கேரக்டரில் நடித்த ரஜினிக்கு அந்த காட்சியமைப்பினை பிரதிபலிக்கும் வண்ணம் "நான் பொல்லாதவன்" என்கின்ற அருமையான பாடலை இசையைமைத்திருந்தார் எம்.எஸ்.வி. பாடகர் எஸ்.பி.பியின் குரலில் ரஜினிக்கு அப்படியே பொருந்திப் போன இந்தப் பாடல் பட்டி, தொட்டியெல்லாம் அப்போது ஒலித்தது.

மை நேம் ஈஸ் பில்லா:

மை நேம் ஈஸ் பில்லா:

தமிழ் சினிமா உலகில் டான்களையே பார்த்தறியாத 80களுக்கு முதல் முதலில் விருந்தாக அமைந்த படம் "பில்லா"... இந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட்தான். அதிலும், பில்லாவான ரஜினிக்கு அப்போதே இண்ட்ரோ பாடல் அளித்தவர் எம்.எஸ்.வி. "மை நேம் இஸ் பில்லா" என்ற பாடல் பல வருடங்களுக்குப் பின்னர் மறுவடிவம் எடுத்து இன்றைய தலைமுறை நடிகரான அஜித் குமாருக்கு ஒலித்ததே அவருடைய அழுத்தமான இசைக்கு சாட்சி.

அடுத்தது கமல்:

அடுத்தது கமல்:

இன்று சினிமா உலகில் உலக நாயகனாக கமல் கொண்டாடப்பட்டாலும், அவருக்கு இசை மூலமாக பாதை அமைத்துத் தந்தவர் எம்.எஸ்.வி என்றால் மிகையாகாது.

தெய்வம் தந்த வீடு:

தெய்வம் தந்த வீடு:

மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பெண்ணிய படைப்புகளில் ஒன்று அவள் ஒரு தொடர்கதை. கமல், சுஜாதா நடிப்பில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்த ஒருபடம் இது. இன்று ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே படத்தினையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அக்காலக் கட்டத்திலேயே வெளிவந்த பெண்ணியத் திரைப்படம். இந்தப் படத்தில் "தெய்வம் தந்த வீடு" என்கின்ற பாடலுக்கு காதுகளுக்கு இனிமையாகவும், ஆனால், ஒரு குடும்பத்தின் நிலையை எடுத்துக் காட்டும் வகையிலும் இசையமைத்து அசத்தியிருந்தார் எம்.எஸ்.வி.

உனக்கென்ன மேலே நின்றாய்:

உனக்கென்ன மேலே நின்றாய்:

அடுத்த படம் கமலின் "சிம்லா ஸ்பெஷல்"... இந்த படத்தில் எம்.எஸ்.வியின் இசைத்திறமையை பிரதிபலிக்க ஒரே ஒரு பாடல் போதும்... அதுதான் "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா". இன்று வரையிலும் இளைஞர்கள் மத்தியிலும் இந்தப் பாட்டுக்கு மவுசு குறையாமல்தான் இருந்து வருகின்றது.

சிப்பி இருக்குது முத்துமிருக்குது:

சிப்பி இருக்குது முத்துமிருக்குது:

கமலுக்கு ஒரு அல்டிமேட் ரெட் கார்பெட் வரவேற்பு கொடுத்த திரைப்படம் "வறுமையின் நிறம் சிகப்பு". இந்தப் படத்தில் ஒரு அந்தாக்‌ஷரி போன்ற வடிவில் வெளிவந்த பாடல்தான் "சிப்பி இருக்குது முத்துமிருக்குது" பாடல். கமலும், ஸ்ரீதேவியும் பாடுவது போன்ற இந்தப் பாடல் அந்த இசைக்காகவே இன்னும் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கின்றது.

காலத்தால் அழியாத பாடல்களால் அந்த மகத்தான கலைஞன் கடைசி வரையில் எல்லோர் மனதிலும் அழியாமல் நிற்பார் என்பது உறுதி...

English summary
M.S.V vishwanathan gave lots of hit songs to the actors of 80s Rajini and kamal hasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil