»   »  1,200 படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்எஸ்வியின் பிறந்த நாள் இன்று!

1,200 படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்எஸ்வியின் பிறந்த நாள் இன்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா உலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 86 வது பிறந்த தினம் இன்று.1928 ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமத்தில் சுப்பிரமணியன் - நாராயணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எம்.எஸ்.வி.

மெல்லிசை மன்னரின் முழுப்பெயர் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன். கேரளாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு, அதே போன்று மனையங்கத் ஹவுஸ் என்பது எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர்.

சிறு வயதில் வறுமை காரணமாக எம்.எஸ்.வியின் தாயார் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்யத் தீர்மானித்து இருவரும் இறக்க இருந்த வேளையில் எம்.எஸ்.வியின் தாத்தா இவர்கள் இருவரையும் காப்பாற்றி கூட்டி வந்தாராம்.

அன்று எம்.எஸ்.வி இறந்து போயிருந்தால் எவ்வளவு பெரிய இழப்பை இந்த இசையுலகம், திரையுலகம் சந்தித்திருக்கும்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் சிறப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.

இசையுலகில் நுழைவதற்கு முன்

இசையுலகில் நுழைவதற்கு முன்

இசையமைப்பாளராக வருவதற்கு முன்பு ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் மாதம் 3 ரூபாய் சம்பளத்திற்கு ஆபிஸ் பாயாக வேலை செய்து இருக்கிறார் எம்.எஸ்.வி. பின்பு டி.எஸ்.பாலையாவுடன் சேர்ந்து நாடகங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

முதல் படம் ஜெனோவா

முதல் படம் ஜெனோவா

எம்.ஜி.ஆரின் ஜெனோவா படத்திற்கு முதன்முதலில் இசையமைத்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆருக்கு இவர் இசையமைப்பது பிடிக்கவில்லை. ஆனால் எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களைப் போட்டுக் காட்டியதும் படத்திற்கு எம்.எஸ்.வியே இசையமைக்கட்டும் என்று கூறியதுடன், அவரின் வீடு வரை சென்று பாராட்டி விட்டு வந்தார்.

விஸ்வநாதன்- ராமமூர்த்தி

விஸ்வநாதன்- ராமமூர்த்தி

இசையமைப்பாளர் ராமமூர்த்தியுடன் இணைந்து முதன்முதலில் இசையமைத்த படம் பணம். எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி தொடர்ந்து 700 படங்களுக்கு இருவரும் இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.

தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே

எம்.எஸ்.வி தனியாக 500 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மொத்தம் 1200 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.

அடுத்த தலைமுறைகளுடன்

அடுத்த தலைமுறைகளுடன்

இளையராஜா, தேவா, கங்கை அமரன், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பளர்களின் இசையில் பாடல்களைப் பாடி இருக்கிறார்.

கவியரசருடன்..

கவியரசருடன்..

கவியரசு கண்ணதாசனும் எம்எஸ்வியும் மிக நெருக்கமானவர்கள். எம்எஸ்வி இசையில் கண்ணதாசனும் வாலியும்தான் அதிகப் பாட்டு எழுதியவர்கள். தனிப்பட்ட முறையிலும் கவியரசரும் இசையரசரும் அத்தனை நட்பாகத் திகழ்ந்தார்கள். கவியரசர் மறைந்த பிறகும், அவரது நினைவைப் போற்றும் வகையில் காதல் மன்னன் படத்தில் கண்ணதாசன் ரசிகராக நடித்திருப்பார் எம்எஸ்வி.

நடிகராக

நடிகராக

சிறுவயதில் நடிகராக வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது, அது நடக்காததால் இசையில் கவனம் செலுத்தினார்.நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக படங்களிலும் நடித்து இருக்கிறார். கண்ணகி, காதலா காதலா, காதல் மன்னன் உள்பட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

மெல்லிசை மன்னர்

மெல்லிசை மன்னர்

மெல்லிசை மன்னர், கலைமாமணி உள்பட 16 க்கும் அதிகமான விருதுகளைப் பெற்று உள்ளார் எம்.எஸ்.வி.

மெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

English summary
MSV 86th Birthday Today. MSV with more than 1200 films to his credit majorly collaborated with Kannadasan, garnering huge success. Starting with his 86th birthday today, we wish the evergreen 'Mellisai Mannar' a long, healthy life.
Please Wait while comments are loading...