»   »  முடிஞ்சா இவன புடி... பாடல்களை ஜூலை 20-ம் தேதி வெளியிடுகிறார் கமல் ஹாஸன்!

முடிஞ்சா இவன புடி... பாடல்களை ஜூலை 20-ம் தேதி வெளியிடுகிறார் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் நேரடித் தமிழ்ப் படமான முடிஞ்சா இவன புடி-யின் பாடல்களை வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் வெளியிடுறார் கமல் ஹாஸன்.

லிங்கா படத்துக்குப் பிறகு ரவிக்குமார் இயக்கும் படம் இது. இப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். முகேஷ் திவாரி, சரத் லோகித் சிவா ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். நாசர், விச்சு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Mudinja Ivana Pudi audio from July 20

முடிஞ்சா இவன புடி படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.


டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப் படத்தின் பாடல்களை வருகிற ஜுலை 20-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.


இந்த பாடல்களை கமலஹாசன் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படத்தை இயக்கி வரும் கமல், இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

English summary
The Crew of Mudinja Ivana Pudi announced that Actor Kamal Hassan will release the audio of the movie on July 20th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil