twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீ டு குறித்து சர்ச்சைக் கருத்து.. வலுத்தது எதிர்ப்பு.. மன்னிப்புக் கேட்டார் நடிகர் முகேஷ் கண்ணா!

    By
    |

    மும்பை: மீ டு குறித்த தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மன்னிப்புக் கேட்டுள்ளார். பிரபல நடிகர் முகேஷ் கண்ணா.

    Recommended Video

    Shaktimaanன் சர்ச்சை கருத்து! பெண்களை இழிவுப்படுத்திய Mukesh Khanna | OneIndia Tamil

    இந்தி நடிகர் முகேஷ் கண்ணா. மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர்.

    இந்தியில், முஜே கசம் ஹே, ரூஹி, கேப்டன் பார்ரி, சுகந்த, மேரி ஆன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    ரிலீஸுக்கு ரெடியாகும் சூரரைப் போற்று.. மலையாளத்தில் சூர்யாவுக்கு வாய்ஸ் கொடுத்த பிரபல ஹீரோ! ரிலீஸுக்கு ரெடியாகும் சூரரைப் போற்று.. மலையாளத்தில் சூர்யாவுக்கு வாய்ஸ் கொடுத்த பிரபல ஹீரோ!

    அதிக பிரபலம்

    அதிக பிரபலம்

    'சக்திமான்' தொடர் மூலம் இன்னும் பிரபலமானார். சூப்பர் ஹீரோ, ஆக்‌ஷன் காமெடி தொடரான இது, குழந்தைகளுக்குப் பிடித்த தொடராக வெளியான காலகட்டத்தில் இருந்தது. அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராகவும் இது அமைந்தது. இதையடுத்து அதிக பிரபலம் அடைந்தார், முகேஷ் கண்ணா.

    ஆண்களுக்கு நிகராக

    ஆண்களுக்கு நிகராக

    இவர் மீ டு இயக்கம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 'வீட்டை பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் வேலை. அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகுதான் மீ டூ பிரச்னை உருவானது. ஆண்களுக்கு நிகராக நடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று முகேஷ் கண்ணா வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.

    கருத்துக்கு விளக்கம்

    கருத்துக்கு விளக்கம்

    அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நடிகர் முகேஷ் கன்னா தான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் பெண்களை மதிப்பவன். அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொள்பவன். பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நான் சொல்லியதே இல்லை.

    தவறான நோக்கில்

    தவறான நோக்கில்

    பெண்கள் வேலைக்குச் செல்வதால் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துதான் அந்த வீடியோவில் பேசினேன். எனது கருத்தை தவறான நோக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். தனது கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்துவதுபோல் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Mukesh Khanna apologises for his comments on the #MeToo movement
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X