»   »  25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் முக்தா சீனிவாசன்!

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் முக்தா சீனிவாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன், ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன்.

அவர் திரைப்பட துறைக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.

Muktha Srinivasan to start his new venture after 25 years

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்கையைத் தழுவி 'மனித நேயர் ராமானுஜர்' என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார்.

படம் பற்றி அவர் கூறுகையில், "ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறேன்.

பிரபல நடிகர்கள் திரையில் கதாபாத்திரமாக பதிய மாட்டார்கள். அவர்களது இமேஜ் அந்த கதாப்பாத்திரத்தை மழுங்கடித்து விடும். அதனால்தான் ராமானுஜராக புதுமுகத்தை நடிக்க வைக்க உள்ளேன்.

பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப் பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆள் ராமானுஜர்தான். இது எனது இயக்கத்தில் வரும் 45 படம்.

மார்ச் மாதம் படப்பிடிப்பை துவக்கி மூன்றே மாதத்தில் திரையிட உள்ளோம்.
ஸ்ரீ பெரும்பத்தூர், கல்யாணபுரம், கோவிலடி, திருக்கோவிலூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ஸ்ரீ ராமானுஜர் அவரது வாழ்கையை திரையில் பதிவிடுவதில் எனக்கு பெருமை," என்றார் முக்தா.வி.சீனிவாசன்.

முக்தா.வி.சீனிவாசன் இதுவரை இயக்கிய, தயாரித்த படங்கள்...

முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக்குளம், ஓடிவிளையாடு பாபா, மகனே கேள், ஸ்ரீ ராமஜெயம், சினிமா பைத்தியம், பனித்திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன்மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், ஆயிரம்பொய், நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், சூரியகாந்தி, அன்பைத்தேடி, அந்தரங்கம், பேரும் புகழும், அந்தமான் காதலி, இமயம், அவன் அவள் அது, பொல்லாதவன், கீழ் வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், பரிஷைக்கு நேரமாச்சு, சிவப்பு சூரியன், தம்பதிகள், இரு மேதைகள், ஒரு மலரின் பயணம், கோடைமழை, நாயகன் ( தயாரிப்பு மட்டும் ), கதாநாயகன், சின்ன சின்ன ஆசைகள், எதிர்காற்று, பிரம்மசாரி, ராஜபாண்டி, வாய்க்கொழுப்பு, கண்களின் வார்த்தைகள், பாஞ்சாலி, பலபரிச்சை.

கடைசியாக அவர் இயக்கிய படம் பிரம்மச்சாரி. 1992-ல் வெளியானது இந்தப் படம்.

Read more about: muktha srinivasan
English summary
Veteran film maker Muktha Srinivasan is all set to start his new movie 'Manitha Neyar Ramanujar' after a long gap of 25 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil