»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட நகருக்கு அறிவு நகர் என்று பெயர் சூட்டியுள்ளது பொருத்தமானது என்று திரைப்பட நகரின்முன்னாள் இயக்குநரான முக்தா.சீனிவாசன் கூறியுள்ளார்.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் உருவாக்கப்பட்டது. இதன் இயக்குநராக முக்தா. சீனிவாசன்நியமிக்கப்பட்டார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். அதன் பின்னர் த.மா.கா. சார்பில் பாராளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டதால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின்போது திரைப்பட நகரின் பெயர் எம்.ஜி.ஆர் அறிவு நகர் என்று மாற்றப்படும் என நிதியமைச்சர்பொன்னையன்அறிவித்தார். அதை முக்தா தற்போது வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,

மிகவும் பொருத்தமான பெயரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சூட்டத் திட்டமிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். திரைப்பட நகரைபொருளாதாரரீதியாக நடத்துவது இயலாத காரியம் என திமுக ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட ஒரு கமிட்டி ஆய்வில் தெரியவந்தது.

இருப்பினும் திரைப்பட நகரை மூடி விட வேண்டாம் என்று முதல்வராக இருந்த கருணாநிதியிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அதை நடத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்அதை மூடி விடாமல் அறிவுத் திடலாக அதை மாற்ற முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள யோசனை மிகவும் சரியானது,பொருத்தமானது.

திரையுலகு குறித்த கண்காட்சியை அங்கு அமைக்கலாம். திரைப்பட வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியையும் அமைக்கலாம்.எம்.ஜி.ஆர். குறித்த பொருட்காட்சியையும் அங்கு அமைக்கலாம். இதுபோன்ற இன்னும் பல மாற்றங்களை அங்கு செய்யலாம்என்று முக்தா ஆலோசனை கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil