»   »  போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நடிகை

போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக நடிகை முமைத் கான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

தமிழை போன்றே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு நிகழ்ச்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முமைத் கான்

முமைத் கான்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை முமைத் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

விசாரணை

விசாரணை

போதைப் பொருள் விவகாரம் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முன்பு முமைத் கான் வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

விசாரணைக் குழு முன்பு ஆஜராக வேண்டியுள்ளதால் முமைத் கான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாராம். முமைத் விசாரணைக்கு வர உள்ளதை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

நடிகர்கள்

நடிகர்கள்

தெலுங்கு திரையுலகை சேர்ந்த ரவி தேஜா, சார்மி கவுர், டான்ஸ் மாஸ்டர் ஷ்யாம் நாயுடு, தருண், தனிஷ் உள்ளிட்ட 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Mumaith Khan is set to quit Telugu Big Boss in order to appear before special investigation team in drug racket case.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil