»   »  ஸ்ரீதேவியின் கணவரின் இமெயிலை ஹேக் செய்து வாலிபரிடம் ரூ.3.5 லட்சம் அபேஸ் செய்த ஜோடி

ஸ்ரீதேவியின் கணவரின் இமெயிலை ஹேக் செய்து வாலிபரிடம் ரூ.3.5 லட்சம் அபேஸ் செய்த ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரின் இமெயிலை ஹேக் செய்த இருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்தவர் கரண் கமல் சர்தா. அவர் தனது பெற்றோரின் மறைவுக்கு பிறகு தனது சகோதரியுடன் கடந்த 2010ம் ஆண்டு மும்பை வந்து செட்டிலாகியுள்ளார். கரணின் சகோதரி மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கரண் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மேலும் கஹானி தேவி என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

Mumbai: Couple hack Boney Kapoor's email, cheat actor of Rs 3.5 lakh

இந்நிலையில் கரணின் மாமா லண்டனில் இருந்து மும்பை வருகையில் விமானத்தில் அவருக்கு அர்ச்சனா சர்மா(27) என்ற பெண் பழக்கமாகியுள்ளார். அர்ச்சனாவிடம் கரண் பற்றி அவரது மாமா தெரிவித்துள்ளார். அதற்கு அர்ச்சனா கரணுக்கு சினிமாவில் தான் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு அழகு நிலையத்தில் வைத்து அர்ச்சனா கரணை சந்தித்து பேசியுள்ளார்.

மோஹித் ரெய்னா என்பவர் 2005ம் ஆண்டு ரிலீஸான ஹிட் படமான நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகமான நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி என்ற படத்தை எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா. பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கரணை ரெய்னா என்பவரிடம் பேச வைத்துள்ளார். படத்தில் நடிக்க ரூ.3.5 லட்சம் தர வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜுஹுவில் உள்ள பிவிஆரில் கௌரவ் ஜோஷி(28) என்பவரை சந்திக்க வேண்டும் எனவும் அர்ச்சனா கரணிடம் கூறியுள்ளார்.

கரணும் ஜோஷியை சந்தித்து இரு தவணைகளில் பணத்தை அளித்துள்ளார். கரணுக்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூரிடம் இருந்து படம் குறித்து இமெயில் வந்துள்ளது.

பணத்தை பெற்ற பிறகு அர்ச்சனாவும், ஜோஷியும் கரணை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் போனி கபூரின் இமெயிலை அந்த 2 பேரும் ஹேக் செய்து இமெயில் அனுப்பியது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனா மற்றும் ஜோஷியை கைது செய்துள்ளனர்.

English summary
Mumbai police arrested a couple for hacking the email account of Bollywood producer Boney Kapoor and cheated a youth of Rs. 3.5 lakh promising him a role in a new movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil