»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை மும்தாஜின் தாயையும் கார் டிரைவரையும் தாக்கிய டிராபிக் போலீஸ்காரர் மும்தாஜிடம் பகிரங்கமாகமன்னிப்பு கேட்டார்.

தமிழகத்தின் முன்னணி கவர்ச்சி நடிகையான மும்தாஜ் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். கடந்தபுதன்கிழமை அவர் தன் வீட்டிலிருந்து கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு காரில் புறப்பட்டார்.மும்தாஜ் தவிர காரில் அவருடைய தாயும், தம்பியும் இருந்தனர்.

அவர்கள் சென்ற கார் ஒரு சிக்னலைக் கடந்த போது அங்கிருந்த டிராபிக் போலீஸ் அந்தக் காரை நிறுத்தி, சிக்னலில்கார் ஏன் நிற்கவில்லை என்று கேட்டார்.

நான் ஒழுங்காத்தான் காரை ஓட்டுறேன். நீங்க தான் வேண்டுமென்றே காரை நிறுத்தி விட்டீர்கள் என்று கார்டிரைவர் கூறினார்.

காரை விட்டு கீழே இறங்காமல் சீட்டில் உட்கார்ந்தவாறே டிரைவர் பேசியதால் அந்த டிராபிக் போலீஸ்காரருக்குக்கடுமையான கோபம் வந்தது. காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வருமாறு டிரைவரிடம் கூறினார்.

இதையடுத்து டிரைவரும் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டிராபிக் போலீஸ்காரரை நோக்கிச் சென்றார்.

நான் போலீஸ்காரன் என்று தெரிந்தும் இப்படிப் பேசலாமா என்று டிராபிக் போலீஸ்காரர் டிரைவரிடம் சத்தம்போட்டுப் பேசினார். இதையடுத்து டிரைவரும் பதிலுக்குக் கோபத்துடன் பேசினார்.

இதையடுத்து கடும் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் திடீரென்று டிரைவரை அடித்துவிட்டார். இதைக் கண்டதும்மும்தாஜின் தாய் பதறிப் போய் காரை விட்டு இறங்கி, டிராபிக் போலீஸ்காரரைப் பார்த்து சத்தம் போட்டுப்பேசினார்.

மும்தாஜின் தாய் என்று தெரியாத அந்த டிராபிக் போலீஸ்காரர் அவரையும் திடீரென்று தாக்கி கீழே தள்ளிவிட்டார்.

காருக்குள்ளிருந்து இவ்வளவு சம்பவங்களையும் பார்த்து கொதித்துப் போனார் மும்தாஜ். காரை விட்டு வெளியேஇறங்கினால் ரசிகர்கள் மொய்த்துக் கொள்வார்களே என்று பயந்த அவர், உடனடியாக செல்போன் மூலம்தன்னுடைய மானேஜரைத் தொடர்பு கொண்டார்.

பின்னர் உடனடியாக தாயையும் டிரைவரையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த போலீஸ் நிலையத்துக்குச்சென்றார் மும்தாஜ். ஒரு நடிகை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வந்ததைக் கண்டதும் பதறிப் போன போலீசார்அவரிடம் என்ன, ஏது என்று விசாரித்தனர்.

சிக்னலில் நடந்ததைக் கூறிய மும்தாஜ், என் அம்மாவையும் டிரைவரையும் தாக்கிய அந்தப் போலீஸ்காரரை நான்சும்மா விட மாட்டேன். இதற்காக எத்தனை லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. இப்போது உடனே அந்தடிராபிக் போலீஸ்காரர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் போலீஸ் கமிஷனரிடம் புகார்செய்வேன் என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக சம்பந்தப்பட்ட டிராபிக்போலீஸ்காரரை அழைத்து வரச் சொன்னார்.

அப்போது தான் அந்த டிராபிக் போலீஸ்காரருக்கு காரில் வந்தது மும்தாஜ் தான் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மும்தாஜின் தாயைக் கீழே பிடித்துத் தள்ளியதற்காகவும், டிரைவரைத் தாக்கியதற்காகவும் மும்தாஜிடம்டிராபிக் போலீஸ்காரர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இதையடுத்தே சமாதானமான மும்தாஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil