»   »  மும்தாஜ் படத்திற்கு கோர்ட் தடை

மும்தாஜ் படத்திற்கு கோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி கடல் மும்தாஜ் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள தத்தித் தாவுது மனசு படத்தைத் திரையிட சென்னைநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மும்தாஜ் தனது பத்திரிக்கைத் தொடர்பாளர் ரியாஸ் அகமது மூலம் தத்தித்தாவுது மனசு என்ற படத்தைத்தயாரித்துள்ளார். இதில் அதிரடி வீராங்கனையாக அவர் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று ரிலீஸ்செய்யப்படவிருந்தது.

இந் நிலையில் சென்னை 17-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் காந்திலால் பன்சாலி என்ற திரைப்பட பைனான்சியர்வழக்குத் தொடர்ந்தார். அதில், படத் தயாரிப்புக்காக கொடுத்த பணத்தை வாக்குறுதி அளித்தபடி குறித்தகாலத்திற்குள் படத் தயாரிப்பாளர் கொடுக்கவில்லை.

எனவே சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில்இப்படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், வருகி 29ம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில்இப் படத்தைத் திரையிட தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil