»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மோணல் தற்கொலை தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைத் தன் மீது வீசியுள்ள சிம்ரன் மீது விரைவில்வழக்கு தொடரப் போவதாக மும்தாஜ் தெரிவித்துள்ளார்.

சிம்ரனின் தங்கையான மோணல் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டபோது துக்கம் விசாரிக்கமோணலின் வீட்டுக்கு வந்திருந்தார் மும்தாஜ்.

அப்போது பல்வேறு தடயங்களை அழித்ததோடு நில்லாமல் அங்கிருந்த பணத்தையும் மும்தாஜ் திருடிக் கொண்டுபோய் விட்டதாக பின்னர் சிம்ரன் நிருபர்களிடம் பரபரப்பாகப் பேட்டியளித்தார்.

மோணல் தற்கொலை பற்றிய முக்கியமான பல தடயங்களை அழித்து விட்டதாக மும்தாஜின் மானேஜரான ரியாஸ்மீதும் சிம்ரன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று வேலூரில் நிருபர்களுக்கு மும்தாஜ் பேட்டியளிக்கையில்,

சிம்ரன் வேண்டுமென்றே என் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார்.

தடயங்களை அழிக்கவோ அல்லது மோணலின் வீட்டில் பணத்தைத் திருடவோ எனக்கு அவசியமே இல்லை.

இப்படிப் பரபரப்பாகக் குற்றச்சாட்டுக்களையும் புகார்களையும் அள்ளி வீசும் சிம்ரன் தற்போது ஏன் போலீசார்விசாரணைக்கு உட்படாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இதிலிருந்தே சிம்ரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று தெரிய வருகிறது. இப்படி ஆதாரமற்றகுற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தியுள்ள அவர் மீது விரைவில் வழக்கு தொடர்வேன் என்றார் மும்தாஜ்.

Please Wait while comments are loading...