»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடனான தொடர்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அதை சந்திப்பேன் என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார்.

அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் தொடர்பு உள்ளதாக வெளியாகும் செய்திகளால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

அனீஸ் இப்ராகிமுடன் தொடர்பு வைத்துள்ளது நான் அல்ல, நடிகை மும்தாஜ்தான் என்று நடிகை நக்மா கூறியுள்ளார். இதை மும்தாஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து மும்தாஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

1988ம் ஆண்டு நடிகை நக்மாவின் வீட்டில் வைத்து ரூ. 10 லட்சம் பணம் கொடுத்ததாக தாவூத்தின் கூட்டாளி ராஜேஷ் கூறியுள்ளார். அந்த ஆண்டில் எனக்கு எட்டு வயதுதான். நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

இதிலிருந்தே நடிகை நக்மா கூறுவது பொய் என்பது தெளிவாகிறது. ஏன் எனது பெயரை தீவிரவாதிகளுடன் தொடர்புப்படுத்தி நக்மா கூறினார் என்பது தெரியவில்லை.

அவரது தங்கை ரோஷினியுடன் எனக்கு ஓரளவு பழக்கம் உள்ளது. ஆனால் நக்மா மற்றும் அவரது இன்னொரு தங்கையான நடிகை ஜோதிகாவுடன் எனக்கு எந்தப் பழக்கம் இல்லை.

எனது இயற் பெயர் நக்மா கான், எனது தந்தை பெயர் கயூப் கான். எனக்கு நான்கு வயதாகும்போதே தந்தை இறந்து விட்டார். எனது தாயார் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் எந்த வழக்கிலும் சிக்கவில்லை.

பத்தாவது வகுப்பு முடித்திருந்தபோது டி.ராஜேந்தர் என்னை தனது மோனிஷா என் மோனலிசா படத்தில் நடிக்க அழைத்து வந்து விட்டார். அதன் பிறகு நான் சென்னையிலேயே தங்கி விட்டேன்.

எனக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினால் நிச்சயம் அதை சந்திப்பேன். சட்டத்தை நான் மதிப்பவள். எனவே எதற்காகவும் நான் பயப்பட மாட்டேன். உண்மைகளை சொல்வேன் என்று கூறியுள்ளார் மும்தாஜ்.

Read more about: anis ibrahim, chennai, mumtaj
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil