»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை மோனல் தற்கொலை தொடர்பாக நடிகை மும்தாஜிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படையினர் நேற்று மும்தாஜை அவரது வீட்டில் வைத்து விசாரித்தது.

நடிகை மோனல் கடந்த மாதம் 14ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனல் இறந்த போது சிம்ரன் கனடாநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். அதன் பிறகு சென்னை வந்த சிம்ரன் மோனலின் தற்கொலைக்கு டான்ஸ் மாஸ்டர் கலாவின்தம்பி பிரசன்னா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தத் தற்கொலை தொடர்பாக ஆதாரங்களை மும்தாஜ், மும்தாஜின் மேனேஜர் ரியாஸ் ஆகியோர் கலாவின்வேண்டுகோளின்பேரில் அழித்ததாகவும் திடுக்கிடும் புகார் கூறினார்.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான தாரங்கள் ஏதேனும் இருந்தால் அதை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்என்று டிஜிபி நெய்ல்வால் கூறியிருந்தார்.

ஆனால் சிம்ரன் இதுவரை எந்த ஆதாரங்களையும் கொடுக்கவில்லை. அதனால் போலீஸாரே தங்கள் நடவடிக்கையைதொடங்கிவிட்டனர்.

அண்ணா நகரில் உள்ள மும்தாஜின் வீட்டுக்கு தனிப்படை போலீஸார் சென்று, விசாரணை மேற்கொண்டனர். சிம்ரன் கூறியுள்ளகுற்றச்சாட்டுக்கள் குறித்து அவரை துருவி எடுத்தனர். குற்றச்சாட்டுக்களை மும்தாஜ் முழுமையாக மறுத்ததாகத் தெரிகிறது.

பதிலுக்கு சிம்ரன் மீதே மும்தாஜ் சில சந்தேகங்களைக் கிளப்பியதாகவும் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக மும்தாஜின் மேமேஜர்ரியாஸ் கான் விசாரிக்கப்படுவார்.

இப்போது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரசன்னாவை உடனே சென்னை திரும்பவும் போலீசார் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.வந்தவுடன் அவரிடமும் விசாரணை நடக்கும்.

விசாரணை நடத்த சிம்ரனின் வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர். ஆனால் சிம்ரன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதாக வீட்டிலுள்ளோர் கூறிவிட்டனர். பஞ்ச தந்திரத்துக்காக அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...