»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் நடிகர் முரளி இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கோவையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சந்திரன் என்பவரிடம் முரளி ரூ.18 லட்சம் கடன்வாங்கியிருந்தார்.

இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக பின் தேதியிட்ட 3 காசோலைகளைசந்திரனுக்கு அவர் கொடுத்தார்.

ஆனால், முரளியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் 3 காசோலைகளும் வங்கியிலிருந்து திரும்பிவந்துவிட்டன.

இதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காசோலை திரும்பி வந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில்நிபந்தனை ஜாமீன் வாங்கி விட்டார்.

முரளி. ஆனால், ரூ. 4.26 லட்சம் மதிப்புள்ள காசோலை திரும்பிவந்த வழக்கில் அவருக்கு கோயம்புத்தூர் 3வது குற்றவியல் நடுவர் மன்றம் பிடிவாரண்ட்பிறப்பித்திருந்தது.

இதையடுத்து இன்று கோவை நீதிமன்றத்தில் முரளி ஆஜராகி ரூ. 4.26 லட்சம் பணத்தைக் கட்டினார்.

இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கான உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீன் உத்தரவுப்படி வரும் 9ம் தேதி முதல் 12ம்தேதி வரை முரளி கோவையில் தங்கியிருந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil