»   »  முரட்டுக்காளை வில்லன் சாந்தாராம் மரணம்!

முரட்டுக்காளை வில்லன் சாந்தாராம் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிக்கு வில்லனாக முரட்டுக்காளை உள்ளிட்ட படங்களில் நடித்த சாந்தாராம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

ரஜினிகாந்துடன் தப்பு தாளங்கள், முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தாராம். உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். முரட்டுக்காளை படத்தில் பண்ணையார் ஜெய்சங்கரின் அடியாளாக நடித்திருப்பார் சாந்தாராம். பண்ணையாரைப் பகைத்துக் கொள்பவர்களை மாட்டுக் கொம்பால் குத்திக் கொல்லும் கேரக்டரில் அவர் வருவார்.

Murattukkalai villain Santharam passes away

கன்னடத்தில் 40 படங்களில் நடித்த சாந்தாராம், பல கன்னடப் படங்களையும் இயக்கியுள்ளார். அம்பரீஷ் உள்ளிட்ட நடிகர்களையும் இயக்கியுள்ளார்.

Murattukkalai villain Santharam passes away

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மருத்துவமனையிலேயே அவர் மரணம் அடைந்தார். சாந்தாராம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

English summary
Director - Actor Santharam was died in hospital due to ill health at Bangalore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil