»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காரைக்குடியில் விஜய் ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். 2 பெண்களுக்குக்காயம் ஏற்பட்டது.

காரைக்குடி ராமவிலாஸ் தியேட்டர் வளாகத்தில் விஜய் நடிக்கும் திருமலை படம் திரையிடப்பட்டுள்ளது.இந்தப்படத்திற்கான பேனர் கட்டுவது தொடர்பாக விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில்,கண்ணப்பன் என்பரை சுரேஷ்,தாஸ் என்ற இருவர் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து கண்ணப்பனின் அண்ணன் திருப்பதி உள்ளிட்ட சிலர், சுரேஷ் மற்றும் தாஸ் ஆகியோர் வீடுகளுக்குச்சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சுரேஷுக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதில் சுரேஷ் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மகனைக் கத்தியால் குத்துவதைத் தடுக்க வந்த சுரேஷின் தாயார் லட்சுமி மற்றும் தாஸின் தாயார் லூர்தி செல்வராணிஆகியோருக்கும் கத்திக் குத்து விழுந்தது. அவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் விஜய், அஜீத் ரசிகர்களின் மோதலினால்தான் இக்கொலை நடந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர்போலீஸார் நடத்திய விசாரணையில், விஜய் ரசிகர்களுக்குள் நடந்த மோதல்தான் இதற்குக் காரணம் எனத்தெரியவந்தது.

திருப்பதியையும், அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர். இதில் திருப்பதிஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil