»   »  'சிஷ்யர்' ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் 'குரு' எஸ்.ஜே.சூர்யா!

'சிஷ்யர்' ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் 'குரு' எஸ்.ஜே.சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்கம் மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமான இவர், அன்பே ஆருயிரே, இசை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறைவி படம் வெளியானது. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

வில்லன்...

வில்லன்...

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தத் தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் உறுதி செய்துள்ளார்.

2 மொழிகளில்...

2 மொழிகளில்...

மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ்.

ப்ரிணிதி சோப்ரா...

ப்ரிணிதி சோப்ரா...

90 கோடி செலவில் உருவாகும் இப்படத்தின் நாயகியாக ப்ரிணிதி சோப்ரா நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் ஜூலை 15 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

அக்‌ஷய்குமார்...

அக்‌ஷய்குமார்...

முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள இந்த கதாபாத்திரத்தில், 2.0 படத்தில் ரஜினியின் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பார் எனக் கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது.

உதவி இயக்குநர்...

இதேபோல், எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற வெற்றிப்படங்களில் உதவி இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Putting an end to the rumors, the director AR Muragadoss has finally confirmed that SJ Surya is acting in his next film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil