»   »  ரஜினி தலைமையில் இசை வெளியீடு? மகேஷ் பாபுவுக்காக முருகதாஸ் போடும் மாஸ்டர் ப்ளான்!

ரஜினி தலைமையில் இசை வெளியீடு? மகேஷ் பாபுவுக்காக முருகதாஸ் போடும் மாஸ்டர் ப்ளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'துப்பாக்கி', 'கத்தி' என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் பரத் வில்லன்களாகவும், ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாகவும் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 9-ம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில் படம் செப்டம்பர் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Murugadoss plan to Spider audio release in front of rajinikanth

மகேஷ் பாபுவிற்கு ஓரளவிற்கு தமிழில் நல்ல மார்க்கெட் உள்ளது. மகேஷ்பாபுவை பிரமாண்டமாக தமிழில் அறிமுகம் செய்யவுள்ளாராம் முருகதாஸ். இதற்காக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாராம் முருகதாஸ்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி பாடல்களை ரஜினிகாந்த் முன்னிலையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே மேடையில் இரண்டு பேரையும் அமரவைத்து மகேஷ்பாபுவுக்கு வார்ம் வெல்கம் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் முருகதாஸ் குழுவினர்.

English summary
Murugadoss is planning to release Mahesh Babu's Spider audio in front of Rajinikanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil