»   »  அக்ஷய் குமாருக்காக விஜய்யின் கத்தியை 'டிங்கரிங்' செய்யும் முருகதாஸ்

அக்ஷய் குமாருக்காக விஜய்யின் கத்தியை 'டிங்கரிங்' செய்யும் முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கத்தி படத்தின் இந்தி ரீமேக்கை வித்தியாசமாக எடுக்க விரும்புகிறாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் ஹிட்டானது. இந்நிலையில் முருகதாஸ் கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

Murugadoss wants hindi Kaththi to be different

தமிழ் கத்தி கதையை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய முருகதாஸ் விரும்பவில்லையாம். அதனால் கதையில் ஒரு சில திருத்தங்களை செய்ய உள்ளார். விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து தமிழ் கத்தியை படமாக்கினார்.

இந்தியில் தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து படம் எடுக்க உள்ளார் முருகதாஸ். முன்னதாக விஜய் நடித்த துப்பாக்கி படத்தை முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்தார். அதிலும் அக்ஷய் குமார் தான் ஹீரோவாக நடித்தார்.

தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க பாலிவுட் ஹீரோக்கள் போட்டா போட்டி போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director AR Murugadoss wants Hindi remake of Kaththi to be different from the orginal one.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil