»   »  தங்கமே தமிழுக்கு இல்லை தட்டுப்பாடு... ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை டிரெண்டாக்கும் ரசிகர்கள்

தங்கமே தமிழுக்கு இல்லை தட்டுப்பாடு... ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை டிரெண்டாக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1967 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி பிறந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 49வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ரகுமான்..இவர் ஆஸ்கர் விருதுகளை வென்றதை விட தமிழில் பேசியதுதான் இன்றுவரை ஹைலைட்டாக உள்ளது.

இன்று ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #hbdarrahman என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி தேசிய அளவில் ட்ரெண்டடிக்க வைத்திருக்கின்றனர்.

இனிவரும் காலம்

"தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்அலை பாயுமே இனிவரும்காலம்இளைஞனின் காலம் உன்கடல் மெல்லிசை பாடுமே" என்று இசைப்புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் திவ்யா.

தாய் மொழியில்

"அந்நிய மண்ணில் நெஞ்சை நிமிர்த்தி தாய் மொழி தமிழில் பேசிய கலைஞன்" 2 ஆஸ்கர் விருதுகளை வென்றபின் ரகுமான் தமிழில் பேசியதைக் கூறி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் ஹரி.

மெட்டு போடு

மெட்டு போடு.. மெட்டு போடு.. அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு.. டூயட் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளைக் குறிப்பிட்டு ரகுமானிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் அமீர்.

என்றென்றும் புன்னகை

இசைப்பிரியர்களுக்கு "என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை.." தருபவரே பிறந்தநாள் வாழ்த்துகள்!! என்று வாழ்த்தியிருக்கிறார் கண்ணா.

காற்றில் அலைவரிசை

"காற்றில் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சில் நனைகின்றதா" என்று உயிரே படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார் குட்டி.

இதுபோன்ற ஏராளமான ரசிகர்களின் வாழ்த்தால் தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #hbdarrahman என்னும் ஹெஷ்டேக்.

English summary
Music Composer A.R.Rahman Today Celebrates his 49th Birthday - Fans Wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil