»   »  அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் 'இசைமழை' பொழியப்போகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் 'இசைமழை' பொழியப்போகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பர் மாதம் பிரிட்டனில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்தாண்டு அமெரிக்கா நாட்டில் 'இன்டிமேட்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

Music Composer A R Rahman Concert's in UK

அங்குள்ள முக்கிய நகரங்களில் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்தாண்டு பிரிட்டன் நாட்டில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர் திட்டமிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 22ம் தேதி முதல் 30 ம் தேதி வரை லண்டன், பிர்மிங்ஹம், லீட்ஸ், மான்செஸ்டர் போன்ற நகரங்களில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

இதில் தமிழ், இந்தி உட்பட அவர் இசையமைத்த பல்வேறு மொழிகளில் உள்ள பிரபலமான பாடல்களை இசைக்குழுவினருடன் இணைந்து பின்னணி பாடகர்-பாடகியர் பாடவுள்ளனர்.

இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 8ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Music Composer AR Rahman plans to conduct concerts in the UK in September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil