ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் .. கட்டில் பாடல் பணிகளுக்கு இடையே எளிமையான கொண்டாட்டம் !
சென்னை : இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்த நாள் விழா, கட்டில் திரைப்படப்பாடல் பணிகளுக்கு இடையே எளிமையாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, இவர் பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பிரபுதேவா, மீனா, சங்கீதா,மணிவண்ணன், விவேக் போன்றவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் கலர்புல் நிலவு, ஏய் பொண்டாடிக்கும் போன்ற பாடல்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இதனால் , அப்பாவைப் போலவே இவரும் குத்துப்பாடல்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவதாக இருந்தார்.
விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் எம்.குமரன் சன் ஆப் மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.
வழக்கமாக ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்களின் படைசூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் காரணமாக கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே இன்று (20.7.2020) நடைப்பெற்றது.

இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி வருகிறது. பாடல்கள் எல்லோரின் மனதையும் கொள்ளையடிக்கும் என்பது உறுதி. கொரானாவிலிருந்து மீண்டு சினிமா உட்பட உலகின் அனைத்து தொழில்களும் புதிய உற்சாகத்துடன், புதிய வேகத்துடன் முன்பைவிட பலமடங்கு வீரியத்துடன் விஸ்வரூபம் எடுத்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் என்பது உறுதி என கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறினார்.


Click it and Unblock the Notifications











