Don't Miss!
- Finance
வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- News
பொங்கல் பரிசு ரூ.1000.. அதை விடுங்க.. இப்ப 4.40 லட்சம் பேராமே.. கூட்டுறவு துறை சொன்ன முக்கிய தகவல்
- Lifestyle
எச்சரிக்கை! மறந்தும் இந்த சத்து மாத்திரைகளை ஒன்னா சாப்பிட்ராதீங்க... இல்லன்னா அது ஆபத்தை உண்டாக்கும்...
- Technology
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
விஜய் அண்ணா..வாரிசு படம் பார்த்து கண்கலங்கிய தமன்.. ட்விட்டரில் உருக்கமான பதிவு!
சென்னை : விஜய்யின் வாரிசு படம் பார்த்த இசையமைப்பாளர் தமன் ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
முக நூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்,ஊடகங்கள் என அனைத்தின் பார்வையும் நாளை வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மீதே உள்ளது. இவ்விரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், இணையமே திக்குமுக்காடி வருகிறது.
துணிவா.....வாரிசா மோதிப் பார்த்துவிடலாம் என இரு ரசிகர்களும் தரமான சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
வாரிசு க்ளைமாக்சில் நடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. விஜய் குறித்து பேசிய குஷ்பூ!

தளபதி விஜய்யின் வாரிசு
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திலிருந்து பாடல்கள், டீசர்கள் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் மீதான ஆவலை தூண்டும் வகையில், இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில், விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாட்டு,டான்ஸ்,கதை என அனைத்தையும் சொல்லி அசத்தினார்.

கொண்டாடும் ரசிகர்கள்
வாரிசு படத்தில் இருந்து வெளியாகியுள்ள, ரஞ்சிதமே பாடல், தீ தளபதி, soul of varisu ஆகிய மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த பாடலுக்கு ரசிகர்கள் நாளை திரையரங்கமே அதிரும் அளவுக்கு ஆட்டம் போடுவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. வாரிசு படத்தை வெற்றிப்படமாக்க விஜய்யின் தீவிர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், ரத்ததானம், தோப்புக்கரணம் என பலவிதமான வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.

கண்கலங்கிய தமன்
இந்நிலையில், வாரிசு படத்தைப்பார்த்த இசையமைப்பாளர் தமன், தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் அண்ணா...வாரிசு படத்தின் எமோஷனல் காட்சிகளையும் பார்த்து, நான் அழுதேன். கண்ணீர் விலைமதிப்பற்றது. வாரிசு படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி அண்ணா ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் வில்லனாகவும், சரத்குமார் அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும், பிரபு, ஷ்யாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் அண்ணனாகவும் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார்.