ஹோட்டலில் போதை விருந்து.. பிரபல இசையமைப்பாளரின் மகள் கைது.. கெட்ட ஆட்டமாம்.. பெரும் பரபரப்பு

சென்னை: தமிழ் சினிமாவில் போதை கலாசாரம் காலங்காலமாக இருந்துவருகிறது. ஆனால் சமீபமாக அது அதிகளவு வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரிம் மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதையால் பல குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றன. பலர் உயிரை விட்டும்வருகிறார்கள். இதுகுறித்து கடந்த பல வருடங்களாகவே எக்கச்சக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் போதை குழியில் விழுபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்தபாடில்லை. அதுவும் இப்போதெல்லாம் மது, சிகரெட் போதைகளை தாண்டி வேறு விதமான போதைகளுக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

தமிழ் சினிமாவில்: கோலிவுட்டை பொறுத்தவரை போதை கலாசாரம் பல்கி பெருகிவிட்டது. பல பிரபலங்கள் தடை செய்யப்பட்ட போதை பொருளை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள்; அதனை எடுத்துக்கொண்டால்தான் அவர்களால் வேலையே செய்ய முடியும் என்ற பேச்சுக்கள் நீண்ட காலமாகவே உண்டு. ஆனால் அது எந்தவிதத்திலும் பெரிதாக நிரூபணம் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Music composer s daughter arrested for attending drug party in Chennai

சிக்கிய நடிகர்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டி பெரும் பரபரப்பான நிகழ்வு நடந்தது. அதாவது பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் ஹீரோவுமான கிருஷ்ணா ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்கள். சிறையில் இருந்த அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பெரிய அதிர்ச்சியை உண்டு செய்தது.

போதை பார்ட்டிகள்: அவர்கள் கைதுக்கு பிறகும் கோலிவுட்டில் போதை கலாசாரத்துக்கு பெரிய குறையில்லை என்றுதான் தெரிகிறது. மேலும் அளவுக்கதிகமாக போதை பார்ட்டிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் போதை விருந்து அரங்கேறியிருக்கிறது. அதாவது கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் கஞ்சா, மெத்தபெட்டமைன் என தடை செய்யப்பட்ட போதை பொருள்களை கொண்டு பார்ட்டி நடந்திருக்கிறது. அனைவரும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளரின் மகள்: இதுதொடர்பான தகவல் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கே சென்று சோதனை செய்ததில்; அறை ஒன்றில் சிலர் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களில் ஆனந்தபுரத்து வீடு இசையமைப்பாளரான ரமேஷ் கிருஷ்ணாவின் மகளும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. அதனையடுத்து அவர் உட்பட இரண்டு பெண்கள் மற்றும் 17 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் நள்ளிரவு ஆஜர் செய்தார்கள். அவர்களை விசாரித்துவிட்டு எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X