Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. அண்ணாமலை பரபர பேட்டி
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம்.. பற்கள் உடைந்தன.. ஆபத்தான கட்டத்தை கடந்தார்!
சென்னை : மலேஷியாவில் நடைபெற்று வரும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் அம்மாவுக்காக பிச்சை எடுத்த விஜய் ஆண்டனி ஒட்டு மொத்த பெண் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர வீடியோ வெளியீடு

பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கி, நடித்து, இசையமைத்து, படத்தொகுப்பையும் அவரே செய்து வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விபத்தில் சிக்கினார்
பிச்சைக்காரன் 2 படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு மலேசியாவில் லங்காவி தீவில் நடந்து கொண்டிருந்தது. இந்த பாடலுக்காக ஒரு படகில் படப்பிடிப்புக்கு தேவையான பொருட்களும், ஸ்கூட்டர் போட்டில் விஜய் ஆண்டனி 120 கிலோ மீட்டர் வேகத்தில் படகை ஓட்டிக்கொண்டு வந்த போது , படகு எதிர்பாராத விதமாக ஷூட்டிங் பொருட்கள் வைத்திருந்த படகில் மோதி விபத்திற்குள்ளாகியது.

பற்கள் உடைந்தன
விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீருக்குள் சென்று விட்டார். இதையடுத்து, துணை இயக்குநர்கள் மற்றும் சில படக்குழுவினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு அவருக்கு முதல் உதவி அளித்து லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்கு முகம் மற்றும் வாய்ப்பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டு பற்கள் உடைந்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் அறுவை சிகிச்சை
தற்போது விஜய் ஆண்டனி நலமாக இருக்கிறார் ஆனால் பற்கள் உடைந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் சென்னையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தெரிவித்ததால், அவர் விரைவில் சென்னை திரும்ப உள்ளார்.

படப்பிடிப்பு நிறுத்தம்
பிச்சைக்காரன் 2 படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்க வேண்டி இருந்த நிலையில், படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்தால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. பிச்சைக்காரன் 2 படத்தில் ஜான் விஜய், ஹரீஷ் பேராடி, ஒய்ஜி மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.