அனிருத் பிறந்தநாள்.. 35 வயதில் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே எழுப்பியிருக்காரே.. சொத்து மதிப்பு தெரியுமா?

சென்னை: கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் அனிருத். அவர் கடைசியாக கூலி படத்தில் பணியாற்றியிருந்தார். அடுத்ததாக சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்திருக்கும் அரசன் படத்துக்கும் அனிருத்தான் இசை என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த 3 படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தன. அதிலும் ஒய் திஸ் கொல வெறி பாடல் இந்தியா முழுவதும் சென்சேஷனல் ஹிட்டடித்தது. இதனால் முதல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த அளவுக்கு பிரபல்யம் அடைந்தாரோ அதே நிலைமை அனிருத்துக்கும் உருவானது.

வரிசையாக படங்கள்: 3 படத்தின் பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்ததை தொடர்ந்து அனிருத்துக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்தன. கத்தி,எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை என தான் இசையமைத்த படங்களில் எல்லாம் தன்னுடைய முத்திரையை அழுத்தமாகவே பதித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பெரிய ஹீரோக்களும் அனிருத்தின் பக்கம் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் படு பிஸியான இசையமைப்பாளராக மாறினார் அவர்.

Music Director Anirudh Birthday Today Here are details about his Net Worth
Photo Credit:

ரஜினி முதல் கமல்வரை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாமே அனியின் ஸ்டூடியோவுக்குத்தான் சென்றன. இதனால் அவர் இல்லாமல் பெரிய ஹீரோக்களின் படங்களே இல்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. முக்கியமாக ரஜினியின் செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார் அனிருத். கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட அனிருத்தை ரொம்பவே ரஜினி புகழ்ந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

விமர்சனமும் உண்டுதான்: அவரது பாடல்கள் எவ்வளவுக்கு எவ்வளவு புகழப்படுகிறதோ அதே அளவுக்கு விமர்சனமும் எழுந்திருக்கின்றன. ஒரே மாதிரி இசையைத்தான் பயன்படுத்துகிறார், தனது பாடலையும், மற்றவர்களின் பாடல்களையும் காப்பி அடிக்கிறார் என்று சகட்டுமேனிக்கு எழுந்திருக்கின்றன. ஆனாலும் இப்போதைக்கு அவர்தான் கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளர். இந்நிலையில் இன்று அவர் தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சொத்து மதிப்பு: அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துவரும் சூழலில் அனிருத்தின் சொத்து ம்திப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன. அதன்படி ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவருக்கு மொத்தம் 70 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். சென்னையில் சொகுசு பங்களா வைத்திருக்கும் அவரிடம் மூன்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி சினிமாவில் சம்பாதிப்பதை வேறு தொழில்களில் முதலீடு செய்து அதிலிருந்தும் வருமானத்தை ஈட்டுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X