திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த அனிருத்.. பேட்டியில் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தென்னிந்திய திரையுலகில், தற்போது டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர், அனிருத். 17 வயதில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உறவினர் முறை சகோதரர் ஆன இவர், 'Why This Kolaveri' பாடல் மூலம் ஹிட் இசையமைப்பாளராக மாறினார். இதைத்தொடர்ந்து, அவர் இசையமைத்த திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.

அனிருத்திற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், விஜய், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்த அனிருத், இப்போது டாப் ஸ்டார்கள் படங்களுக்கு இசையமைக்கும் ராக் ஸ்டாராக மாறி இருக்கிறார். சிங்கிளாக இருக்கும் அனிருத் சுற்றி பல காதல் கிசுகிசுக்களும், திருமண வதந்திகளும் அவ்வப்போது பரவி வருகிறது. அனிருத்தின் திருமணம் குறித்து அவரிடம் கேட்கிறார்களோ இல்லையோ, அவரது அப்பா, அம்மா எங்கு சென்றாலும் அனிருத்திற்கு எப்போது கல்யாணம் என கேட்கின்றனர். கூலி படம் பார்த்த வந்த அனிருத்தின் தந்தையிடம் அனிருத்திற்கு எப்போது கல்யாணம் என செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்,"எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு தெரிந்தால் கட்டாயம் என்னிடம் வந்து சொல்லுங்கள் என கூறியிருந்தார்.

Anirudh Tirumala
Photo Credit:

திருப்பதியில் அனிருத்: அண்மையில், அனிருத் இசையமைத்து இருந்த கூலி திரைப்படம் வெளியானது. அந்த படம் இடம் பெற்ற அனைத்து பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு வெற்றிக்கு அனிருத்தின் இசை முக்கிய காரணம் என்று சொல்லலாம். அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் அனிருத், திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று அதிகாலை 'அபிஷேக சேவை'யில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து கோயில் பூசாரிகள் அவருக்கு வேத ஆசிகளை வழங்கினர், மேலும் கோயில் அதிகாரிகள் அவருக்கு 'தீர்த்த பிரசாதம்' வழங்கினார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், கூலி,மதராஸி படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X