twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.ஏ.சி. யை திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல: இசையமைப்பாளர் பாலமுரளி பாலு

    இயக்குநர் எஸ்.ஏ.சி.யை திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல எனத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.

    |

    சென்னை: இயக்குநர் எஸ்.ஏ.சி.யை திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் நான் அதை செய்திருக்கிறேன் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் டிராபிக் ராமசாமி படத்தின் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.

    டிராப்பிக் ராமசாமி படத்திற்கு இசையமைத்துள்ளவர் பாலமுரளி பாலு. இவர் பீச்சாங்கை படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

    ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், கஜினிகாந்த் உள்பட திரைக்கு வரவிக்கும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    வளர்ந்து வரும் இசையமைப்பாளரான பாலமுரளி பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இசைத்துறையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    நன்றி:

    நன்றி:

    அப்போது, அவர் கூறியதாவது, "நான் "பீச்சாங்கை" படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து:

    இருட்டு அறையில் முரட்டு குத்து:

    இதுவரை பீச்சாங்கை, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் எனது இசையில் வெளியாகியுள்ளது. விக்கி இயக்கத்தில், பிரபல இயக்குனர் S.A.சந்திரசேகர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள "டிராபிக் ராமசாமி" படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

    ஆர்யா படம்:

    ஆர்யா படம்:

    மேலும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆர்யா நடிக்கும் "கஜினிகாந்த்" மற்றும் "பல்லு படாம பாத்துக்க", மீடியா மார்ஷல் தயாரிப்பில் அருள்.S இயக்கத்தில் உருவாகும் "தட்றோம் தூக்குறோம்" ஆகிய படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன்.

    வாய்ப்புகள்:

    வாய்ப்புகள்:

    விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிப்பில் கவனம் செலுத்துவதால், எங்களை போன்ற புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    ப்ளீஸ் வேண்டாம்:

    ப்ளீஸ் வேண்டாம்:

    நான் இசையமைத்த படங்களை எனது அப்பா அம்மா பார்த்துள்ளனர். ஆனால் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை பார்க்க வேண்டாம் என நானே அவர்களிடம் கூறிவிட்டேன்" என அவர் தெரிவித்தார்.

    English summary
    "Its not very easy to satisfy director S.A.Chandrasekhar", says Traffic Ramasamy music director Balamurali Bala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X