மீண்டும் ஒரு விவாகரத்து.. மனைவியை பிரிந்தார் இமான்.. முடிவுக்கு வந்தது 13 வருட திருமண வாழ்க்கை!

சென்னை: பிரபல இசையமைப்பாளரான டி இமான் தனது மனைவியை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

மனைவியை விவாகரத்து செய்த இமான்: கோலிவுட்டின் அடுத்த அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். தமிழில் மைனா மற்றும் கும்கி படங்களின் மூலம் பெரும் பிரபலமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார் டி இமான். இவரது 50வது படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அமைந்தது.

கடைசியாக அண்ணாத்த

கடைசியாக அண்ணாத்த

இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட்டானது. இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இமான். கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார் டி இமான். இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட்டானது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கேப்டன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் டி இமான். இந்நிலையில் டி இமானின் சமூக வலைதள பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முறிந்த 13 வருட திருமண வாழ்க்கை

முறிந்த 13 வருட திருமண வாழ்க்கை

அதாவது தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் டி இமான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட்டை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார் இமான். இவர்களின் 13 ஆண்டு திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது.

நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

இதனை இசையமைப்பாளர் இமான் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது டிவிட்டர் பதிவில் இமான் தெரிவித்திருப்பதாவது, "எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ரசிகர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து

பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து

வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் செல்லும் போது, மோனிக்கா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக இருக்க முடியாது."

பிரைவெசி கொடுங்கள்

பிரைவெசி கொடுங்கள்

"எங்கள் நலம் விரும்பிகள், இசை ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் பிரைவெசியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் முன்னேறவும், முன்னே செல்லவும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி" இவ்வாறு டி இமான் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஜோடி விவாகரத்து

நட்சத்திர ஜோடி விவாகரத்து

இசையமைப்பாளர் டி இமானின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் டி இமானும் தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X