»   »  சாரல் படத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர், புது பாடலாசிரியர்!

சாரல் படத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர், புது பாடலாசிரியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாரல் படம் மூலம் ஒரு இளம் இசையமைப்பாளரும், புதிய பாடலாசியரும் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இஷான் தேவ் மற்றும் குணசீலன்.

இஷான் தேவ் கேரளாவைச் சேர்ந்தவர். சாரல்தான் தமிழில் அவருக்கு முதல் படம். மலையாளத்தில் ஏற்கெனவே இசையமைத்துள்ளார்.

Music director Ishaan Dev, lyricist Guna make debut through Saaral

குணா என்கிற குணசீலன் அடிப்படையில் பத்திரிகையாளர். பின்னர் பிஆர்ஓவாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், சாரல் படத்தில் துணை இயக்குநராகவும் பாடல் ஆசிரியராகவும் மாறியிருக்கிறார்.

Music director Ishaan Dev, lyricist Guna make debut through Saaral

சாரல் படத்தில் 5 பாடல்கள். அவற்றில் 'என்ன செஞ்ச புள்ள...' என்ற பாடலை குணா எழுதியுள்ளார். இந்தப் பாடல் ரிலீசான நேற்றே 'இன்ஸ்டன்ட் ஹிட்' எனும் அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

மீதியுள்ள நான்கு பாடல்களில் மூன்றை வளர்ந்து வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதியுள்ளார். ஏற்கெனவே 'உ' படத்தில் இவர் எழுதிய திக்கித் திணறுது தேவதை... பாடல் சூப்பர் ஹிட். சாரல் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... என்ற பாடல் கேட்ட உடனே பிடித்துவிடும் அளவுக்கு உள்ளது. இத்தனைக்கும் ரஜினி முருகன் படத்துக்கு முன்பே உருவான பாடல் இது. ஆனால் படம் தாமதமாகிவிட்டது.

Music director Ishaan Dev, lyricist Guna make debut through Saaral

கண்ணால தாக்குற... , ரோஜா பூப்போலே ஆகிய மேலும் இரு பாடல்களையும் சாரல் படத்தில் எழுதியுள்ளார் முருகன் மந்திரம்.

English summary
Music director Ishaan Dev and Lyricist Guna are making their debut in Saaral movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil