For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன..விஜய்க்கு இசையமைப்பாளர் கொடுத்த அட்வைஸ்!

  |

  சென்னை : உங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன அதில் கவனம் செலுத்துங்கள் என்று இசையமைப்பாளர் நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார்.

  நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் பாண்டிகையையொட்டி ஜனவரி 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளதால்,படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா,சரத்குமார்,ஷாம்,எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு என பலர் நடித்துள்ளனர்.

  யப்பா.. இது பீஸ்ட் படம்ப்பா.. அஜித்தின் துணிவு டிரைலரை துவைத்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்! யப்பா.. இது பீஸ்ட் படம்ப்பா.. அஜித்தின் துணிவு டிரைலரை துவைத்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்!

  வாரிசு

  வாரிசு

  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.ஆரம்பமே தள்ளுமுள்ளு அடிதடி என நேரு விளையாட்டு அரங்கம் களேபரமாகவே இருந்தது. இந்த விழாவில் ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அன்புதான் உலகின் ஆயுதம்

  அன்புதான் உலகின் ஆயுதம்

  இந்த விழாவில் பேசிய விஜய் அன்பு தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே உலகின் மிகப்பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்வது என ரசிகர்களை புகழ்ந்து பேசினார். மேலும், ரசிகர்களுடன் செல்ஃபி, ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் என அட்டகாசமாக இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

  சாதாரண உடையில்

  சாதாரண உடையில்

  மாஸ்டர் இசை வெளியிட்டு விழாவிற்கு பிளாக் அண்ட் பிளாக்கில் மிரட்டலாக வந்திருந்த விஜய், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மிகவும் எளிமையான உடையில், சாதாரணமாக வந்திருந்தார். பச்சை கலரில் சட்டையும், வெள்ளை நிறத்தில் பேண்டும் அணிந்து வந்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது.

  மனதை நெருடியது

  மனதை நெருடியது

  இந்நிலையில், இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் கருத்தினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

  பொதுவாக சொல்கிறேன்.

  பொதுவாக சொல்கிறேன்.

  தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

  உங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன

  உங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன

  நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதிதீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

  புரிந்துகொள்ள முடிகிறது

  புரிந்துகொள்ள முடிகிறது

  எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

  நன்கு அலங்கரித்து வாருங்கள்

  நன்கு அலங்கரித்து வாருங்கள்

  ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான். முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

  English summary
  Music composer and host James Vasanthan advised actor Vijay about his simplie dress
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X