twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு வந்தது கற்கள்.. ஆன்லைனில் அதிரடி மோசடி.. பிரபல இசை அமைப்பாளர் புகார்!

    By
    |

    சென்னை: ஆன்லைன் மோசடி காரணமாக பிரபல இசை அமைப்பாளர் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களிடம் மோசடி நடப்பது சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

    எதையாவது பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அதற்கு பதிலாக, செங்கல், கற்களை அழகாக பார்சல் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

     பிக்பாஸில் தர்ஷன் இடத்தை நிரப்ப போவது இந்த மிஸ்டர் இந்தியாதானாம்.. நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரி கேரண்டி! பிக்பாஸில் தர்ஷன் இடத்தை நிரப்ப போவது இந்த மிஸ்டர் இந்தியாதானாம்.. நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரி கேரண்டி!

    சோனாக்‌ஷி சின்ஹா

    சோனாக்‌ஷி சின்ஹா

    பிரபல நிறுவனங்களின் பெயர்களில் நடக்கும் இதுபோன்ற ஆன்லைன் மோசடியில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, சினேகா உல்லால் உள்பட சிலர் நடிகைகள் இதில் பாதிக்கப்பட்டு அதுபற்றி கூறியிருந்தனர்.

    இசை அமைப்பாளர் சாம்

    இசை அமைப்பாளர் சாம்

    இந்நிலையில் இப்போது பிரபல இசை அமைப்பாளர் சாம் சிஎஸ், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார். சாம்.சிஎஸ், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள், அடங்கமறு, நோட்டா, அயோக்யா, கார்த்தியின் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

    ராக்கெட்ரி

    ராக்கெட்ரி

    இப்போது மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி:நம்பி விளைவு, பெல்பாட்டம், கசடதபற உள்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இவர் தனது சகோதரரின் பிறந்த நாளுக்கு ஆப்பிள் வாட்ச் பரிசளிக்க நினைத்தார். இதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்தார்.

    கற்களை பேக் செய்து

    கற்களை பேக் செய்து

    அது வந்த போது மகிழ்ச்சியாக வாங்கி வைத்தார். பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். உள்ளே, கற்களை அழகாக பேக் செய்து அனுப்பியுள்ளனர். அது பற்றி பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்திருக்கிறார் சாம் சிஎஸ். ஆனால், அவர் புகாரை அந்த நிறுவனம் நிராகரித்து விட்டதாம். பணத்தைத் திருப்பி தர மறுத்து விட்டதாகவும் சாம் சி.எஸ் கூறியுள்ளார்.

    ஏமாற்றுக்காரர்கள்

    ஏமாற்றுக்காரர்கள்

    தயவு செய்து இந்த நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்காதீர்கள். ஏமாற்றுக்காரர்கள் என கூறியிருக்கிறார். கூடவே புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம், 'வருந்துகிறோம், உங்கள் ஆர்டர் ஐடியை அனுப்பி வையுங்கள், உதவுகிறோம் என்று பதிலளித்து இருக்கிறது சாம் சி.எஸ்.சுக்கு.

    டூப்ளிகேட் பொருள்

    டூப்ளிகேட் பொருள்

    ரசிகர்கள் சிலர் தங்கள் அனுபவத்தையும் கூறியுள்ளனர். ஒருவர் தனக்கு டூப்ளிகேட் பொருளை அனுப்பி ஏமாற்றியதாக போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இன்னொருவரும் தான் ஏமாற்றப்பட்டதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். சில நெட்டிசன்ஸ், ஆன்லைனில் பொருட்களை வாங்காதீர்கள் என்று கூறி வருகின்றனர்.

    English summary
    Music director Sam CS, seems to have been a victim of online fraud. he had ordered an a branded watch, but he received a neatly packed set of rocks in the box.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X