»   »  தெலுங்கில் அறிமுகமான 'ஒல்லிபெல்லி' இசையமைப்பாளர்!

தெலுங்கில் அறிமுகமான 'ஒல்லிபெல்லி' இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அப்படத்தைத் தொடர்ந்து 'எதிர் நீச்சல்', 'காக்கி சட்டை', 'வேலையில்லா பட்டதாரி', 'வேதாளம்', உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளராகப் பட்டையைக் கிளப்பும் அனிருத் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாயிருக்கிறார். தெலுங்கில் த்ரிவிக்ரம் - பவன் கல்யாண் இணையும் படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் அனிருத்.

Music director who debut in telugu film

இப்படம் பவன் கல்யாணின் 25-வது படமாகும். இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இந்நிலையில், பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களம் இசைக்கு வலுவாக இருந்ததால், கண்டிப்பாக இசையமைக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இசையமைத்திருக்கிறார் அனிருத். அவர் இசையமைத்த பவன் கல்யாணின் 25-வது படம் 2018 ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

முன்பே, தெலுங்கில் 'அ... ஆ', 'ப்ரூஸ்லீ தி ஃபைட்டர்', 'துருவா' உள்ளிட்ட பெரிய முதலீட்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு வந்தது. இவற்றில் ஒப்பந்தமாகி பின்னர் இசை சுற்றுப்பயணம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

English summary
Anirudh to debut in telugu movie which was directed by pawan kalyan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil