»   »  காலத்திற்கு ஏற்ப... ஹீரோவாக மாறும் இசையமைப்பாளர்கள்

காலத்திற்கு ஏற்ப... ஹீரோவாக மாறும் இசையமைப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறும் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தமிழில் ஏற்கனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் ஹீரோக்களாக உருமாறி சக ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் தமிழ், தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத்.

இசையமைப்பாளர்கள்

இசையமைப்பாளர்கள்

இளையாராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளால் உள்ளே வந்திருக்கின்றனர். முன்பு போல இசையமைப்பாளர்கள் இசையை மட்டும் கவனிப்பது இல்லை. மாறாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல நினைக்கின்றனர். மேலும் தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் பாதிபேர் ஹீரோவாகவும் மாறி வருகின்றனர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் டூ ஹீரோ அவதாரம் எடுத்த சிலரைப் பற்றி இங்கே காணலாம்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த விஜய் ஆண்டனி. விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். சுமார் 30 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக மாறினார். நான், சலீம், இந்தியா - பாகிஸ்தான் என்று இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றி பெற்றதில் தற்போது பிச்சைக்காரன், திருடன் ஆகிய படங்களில் சார் ரொம்பவும் பிஸி.

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் குமார்

வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி.பிரகாஷ் வெயில் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். ஹீரோவாக நடிக்கும் ஆசையில் டார்லிங் படத்தில் நாயகனாக நடித்தார். டார்லிங் கைகொடுத்ததில் அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடிக்க படம் நல்ல வெற்றி பெற்றது. இன்று தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.வியின் கைவசம் தற்போது புருஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன் டா இந்த கார்த்தி ஆகிய படங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் இசை, நடிப்பு என்று இரட்டை சவாரி செய்யும் இவரின் அறிமுகப் படமான 'பென்சில்' இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத்

விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ், தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்கும் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹீரோவாகும் ஆசை வந்திருக்கிறது. இவரின் நண்பரும், இயக்குநருமான சுகுமார் இயக்கும் புதிய படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கிறார். அடுத்த வருடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அறிமுகப் படத்திலேயே சாருக்கு 2 ஹீரோயின்களாம்!

தமன்

தமன்

மேலே சொன்ன எல்லோரும் இசையமைப்பாளர் டூ ஹீரோவாக புரோமோஷன் ஆகிக் கொண்டிருக்க இந்த வரிசையில் சற்று வித்தியாசம் காட்டுகிறார் தமன். பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தமன் தற்போது தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Vijay Antony, G.V.Prakash Now Music Composer Devi Sri Prasad Turns a Hero. He is Debut in Telugu Movie, Directed by Sukumar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil