»   »  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கம்டா' பாடல் வெளியீடு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கம்டா' பாடல் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை கபாலி நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. பொங்கல் பண்டிக்கை இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக பல்வேறு திரைத்துறையினரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

Musician GV Prakash Kumar is released Kombuvacha Singamda song in support of Jallikattu

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மவுன போராட்டம் நடத்தினார். இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொம்புவச்ச சிங்கம்டா என்ற அந்த பாடலை எழுதியிருப்பவர் கபாலி நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ், இசையமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். 'ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு' என துவங்கும் அந்த பாடல் பட்டையை கிளப்புகிறது.

English summary
Musician cum actor GV Prakash Kumar today released Kombuvacha Singamda song in support of Jallikattu. Arunraja Kamaraj has penned the lyrics

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil