twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வ்ரூபம் திரைப்படம் பற்றிய ஆராய்ச்சிகள் தேவையற்றது: சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

    By Mathi
    |

    Vishwaroopam
    சென்னை: விஸ்வரூபம் படம் பார்த்த பல இஸ்லாமிய நண்பர்கள் பாராட்டி வரும் நிலையில் தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மேலை நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    கமலஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் விஸ்வரூபம் வெளிவருவதற்கு முன்னதாகவே இஸ்லாமிய சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தி்யை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.

    ஏனெனில் கமலஹாசன் இதற்கு முன்னர் எடுத்த திரைப்படங்களான உன்னைப் போல் ஒருவன், ஹேராம் போன்ற சில படங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சில கருத்துகள் அமைந்திருப்பதாகவேக் கருதுகின்றனர். ஆகவே விஸ்வரூபமும் அதுபோல் இருக்குமோ என்ற எண்ணம் பலரிடையே உருவாகியிருப்பது நியாயம்தான்.

    ஆனால் கமலஹாசன் சொல்லுகிறார் இந்தப் படம் நிச்சயமாக "இஸ்லாமியர்களின் நண்பன் கமல்" என்பதை நிரூபிப்பதாக இருக்கும். இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்று ஹாரூண் எம்.பி.யி, தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அகமது ஆகியோரிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கிறார்.

    இப்படம் மலேசியாவில் போட்டுக்காட்டப்பட்டதாக சில நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். படம் பார்த்த பல இஸ்லாமிய நண்பர்கள் கமலஹாசனை பாராட்டியும் இருக்கின்றனர்.

    சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் இஸ்லாமியர்களின் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது. விஸ்வரூபம் படம் அப்படி அல்ல என்று படத்தைப் பார்த்த பல இஸ்லாமிய தணிக்கைக் குழு உறுப்பினர்களே சொல்லுகின்றனர்.

    ஆகவே படம் வெளிவருவதற்கு முன்னதாகவே பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது தேவையற்றதுதான். கமல் அவர்களை நிச்சயமாக நம்புவோம். சிறுபான்மை மக்களின் உற்ற நண்பனாக என்றும் இருப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Muslims movement supports Kamal's new film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X