»   »  ஆபாச பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்: கங்கை அமரன்

ஆபாச பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்: கங்கை அமரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபாசப் பாடல்களை தொடக்கத்திலேயே அனுமதிக்கக் கூடாது என்று இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்திருக்கிறார்.

சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடலிற்கு தமிழக மக்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் சிம்பு, அனிருத் இருவருக்கும் கோவை போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

Must not Allow Pornographic Songs - Gangai Amaran

இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பீப் பாடல் விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஆபாசமாக ஒரு பாடல் வெளிவந்து உள்ளதாக கோவையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற பாடல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஆபாசம் மற்றும் கொச்சையான வார்த்தைகளுடைய பாடல்கள் ஒரு சில வேளையில் அனுமதிக்கப்பட்டு வெளிவந்து விடுகிறது.

இதனால் வருங்காலங்களில் வெளிவரும் பாடல்களிலும் இதைவிட கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்த வாய்ப்பாகிறது. எனவே ஆபாச பாடலை தொடக்கத்திலேயே அனுமதிக்கக்கூடாது." என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார்.

English summary
Beep Song Issue: Director cum Music Composer Gangai Amaran Said "Early on, we must not Allow Pornographic songs".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil