»   »  "கொம்பன்" கார்த்தியைத் தொடர்ந்து "சிங்கம்" சூர்யாவைக் கையில் எடுக்கும் "குட்டிப்புலி" முத்தையா!

"கொம்பன்" கார்த்தியைத் தொடர்ந்து "சிங்கம்" சூர்யாவைக் கையில் எடுக்கும் "குட்டிப்புலி" முத்தையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையாவுக்கு அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கொம்பன்' வசூல் ரீதியாக ஹிட்டடித்தது.

Muthaiah Direct Surya Film

''மெட்ராஸ்' படத்துக்குப் பின் கார்த்திக்கு மிகப்பெரிய ஹிட்டாகவும் 'கொம்பன்' அமைந்தது.இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவை, முத்தையா இயக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.

அம்மா, மாமனார், பாட்டி என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான செண்டிமெண்ட்டை வைத்த முத்தையா இதில் அப்பா செண்டிமெண்டை கையில் எடுக்கவிருக்கிறாராம்.

சூர்யாவுக்கு அப்பாவாக ராஜ்கிரணை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ''முத்தையா எங்கள் படத்திற்கு கதை எழுதுவது உண்மைதான் ஆனால் ஹீரோ யார்? என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறுகின்றனர்.

எனினும் சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Muthaiah Direct Surya's Next Film for Studio Green Productions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil