»   »  நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா?

நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால்-கார்த்தி இருவரையும் முத்தையா இயக்கப்போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.

கார்த்தியை வைத்து 'கொம்பன்', விஷாலை வைத்து 'மருது' படங்களை இயக்கியவர் முத்தையா. தனித்தனியே இரண்டு பேரையும் இயக்கிய முத்தையாவுக்கு தற்போது ஒரே படத்தில் இருவரையும் இயக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.

Muthaiah Direct Vishal and Karthi

நடிகர் சங்க கட்டிடத்திற்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்திற்காக பல்வேறு இயக்குநர்களும் கதை சொன்னதில் முத்தையா சொன்ன கதை இருவருக்கும் பொருந்தும்படி இருக்கிறதாம்.

இதனால் இருவரையும் இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மருது' சுமாராக ஓடியதால் விக்ரம் பிரபுவை இயக்கும் வாய்ப்பை முத்தையா நழுவ விட்டிருக்கிறார்.

விக்ரம் பிரபுவை இயக்க முடியாவிட்டாலும் கார்த்தி-விஷாலை ஒருசேர இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் மனிதர் மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கும், முத்தையா கதையெழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Muthaiah next Direct Double Hero Subject for Nadigar Sangam Building Fund.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil