»   »  முத்தின கத்தரிக்கா... ஃபுல்லா கட்டுது கல்லா!

முத்தின கத்தரிக்கா... ஃபுல்லா கட்டுது கல்லா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய்கள் சீஸனுக்கு தற்காலிக ரெஸ்ட் கொடுத்து, நகைச்சுவை சீஸனுக்கு தாவியிருக்கிறது கோலிவுட். இரு வாரங்களுக்கு முன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது.

இந்த வாரம் வெளியான படங்களில் சுந்தர் சியின் முத்தின கத்தரிக்கா ரேஸில் முந்தியிருக்கிறது.

படம் குறித்து நல்ல 'டாக்' பரவியதால் முதல் நாளிலிருந்தே திருப்தியான கூட்டம். நேற்று சனிக்கிழமை அத்தனை தியேட்டர்களும் ஃபுல். சுந்தர் சிக்கு ஏக மகிழ்ச்சி. காரணம் இதில் அவருக்கு எந்த சுமையும் இல்லை. இயக்குநர் பொறுப்பு இல்லை.

Muthina Kaththrikka become a super hit

ஜாலியாக வந்தோமா, நடித்தோமா என்று இருந்து வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

தலை நகரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மளமளவென ஏகப்பட்ட படங்களில் நடித்தார் சுந்தர். ஆனால் முதல் படத்தின் வெற்றி தொடராததால், சட்டென்று மீண்டும் இயக்கத்தில் தீவிரமானார். தொடர்ந்து வெற்றிப் படங்கள்.

மீண்டும் நடிப்பை அரண்மனையில் ஆரம்பித்தார். அதிலும் வெற்றி. இப்போது முத்தின கத்தரிக்கா.

இப்போது மீண்டும் இயக்கம் தாண்டி, ஹீரோவாக மட்டும் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் சுந்தர்.

English summary
Sundar C's Muthina Kaththarikka is getting good response from the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil