»   »  டைரக்‌ஷனுக்கு தயாராக இருந்த நா.முத்துகுமார்!

டைரக்‌ஷனுக்கு தயாராக இருந்த நா.முத்துகுமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று நம்மை தவிக்கவிட்டு மறைந்த நா.முத்துகுமார் சினிமாவுக்கு வந்ததே இயக்குனர் ஆசையுடன் தான். பாலு மகேந்திராவிடன் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் முத்துகுமார்.

ஆனால் சினிமா அவரது கவிதைத்திறமையை கண்டுகொண்டு பாடலாசிரியர் ஆக்கியது. தொடர்ந்து 12 ஆண்டுகள் பாடல்கள் எண்ணிக்கையில் நம்பர் ஒன் அவர் தான். சின்ன படம், பெரிய படம், பிரபலம், அறிமுகம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எழுதிக் குவித்தார். அத்தனையும் முத்துகள்.

Muthukkumar wants to be a director

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நா.முத்துகுமாருக்கு மீண்டும் இயக்குனர் ஆசை வந்திருக்கிறது. தன் மனதில் நீண்ட நாட்களாக சுழன்றுகொண்டிருந்த பச்சையப்பா கல்லூரி ஸ்க்ரிப்டை கையில் எடுத்தார்.

பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் ரவுடியாக திரிந்து, பின்னர் திருந்தி இறுதியில் அந்தக் கல்லூரிக்கே ப்ரின்சிபல் ஆவதுதான் கதையாம். தான் படித்தபோது கண்ட உண்மை சம்பவங்களை கோர்த்து திரைக்கதை பண்ணியிருந்தார்.

அதை படமாக்க விடாமல் செய்துவிட்டது விதி.

English summary
Na Muthukkumar is really wanted to become a director and made some serious efforts for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil