»   »  'இப்படி வெள்ளந்தியா மொத்த கதையையும் சொல்லிட்டாரே டைரக்டர்!'

'இப்படி வெள்ளந்தியா மொத்த கதையையும் சொல்லிட்டாரே டைரக்டர்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக படம் குறித்த பிரஸ் மீட்களில் படத்தின் கதையை, என்னதான் விதவிதமான கேள்விகளால் துளைத்தெடுத்தாலும் கூட, இயக்குநர்கள் சொல்லவே மாட்டார்கள்.

ஆனால் கௌதம் கார்த்தி, நெப்போலியன், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள முத்துராமலிங்கம் படத்தின் இயக்குநர் ராஜதுரை அப்படி எந்த பிகுவும் பண்ணவில்லை. எடுத்த எடுப்பிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டார்.

Muthuramalingam story revealed

கதை இதுதான்...

காவல் துறை அதிகாரிக்கும் கதாநாயகன் தந்தைக்கும் மோதல். விளைவு தந்தையோடு தலைமறைவாகிறார் நாயகன். போலீசார் தேடோ தேடென்று தேடுகிறார்கள். முடியவில்லை. அப்போதுதான் ஹீரோயின் ஒரு டீலை முன் வைக்கிறார்.

கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என்று சொல்ல, அதிகாரியும், கதாநாயகனும் மோதுகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறான். இதுதாங்க கதை என்றார் இயக்குநர்.

கதைப்படி நாயகன் சிலம்ப வீரன், தந்தை நெப்போலியன் சிலம்பம் கற்றுத் தருபவர். அதனால் சிலம்பச் சண்டை படத்தின் ஸ்பெஷல்.

இன்னொரு ஸ்பெஷல் இளையராஜாவின் இசை.

இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை கமல்ஹாசன் பாடிக் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. படம் முழுக்க நெல்லைத் தமிழ் மணக்கிறதாம்.

English summary
Director Rajadurai of Muthuramalingam movie has revealed the complete story of the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil