»   »  'முட்டு முட்டு' ஆல்பம் புகழ் டீஜேவுக்கு நயன்தாரா படத்தில் வாய்ப்பு!

'முட்டு முட்டு' ஆல்பம் புகழ் டீஜேவுக்கு நயன்தாரா படத்தில் வாய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திரைப்படங்களின் மூலம் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் எனக் கூறும் காலம் எப்போதோ மலையேறிவிட்டது. சினிமா தவிர யூ-ட்யூப் சேனல்கள், இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் என இளைஞர்கள் வெவ்வேறு தளங்களில் சாதிக்கத் தொடங்கி விட்டனர்.

இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட் என இப்போது நிறைய பேர் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கின்றனர். அவற்றின் மூலம் அவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புக் கிடைக்கிறது.

Muttu muttu album fame teejay got chance in tamil film which lead by nayanthara

டப்ஸ்மாஷ், காமெடி யூ-ட்யூப் சேனல்களில் கலக்கியவர்கள் இப்போது சினிமாவிலும் அறிமுகமாவதைப் பார்க்கிறோம். அப்படி தன்னுடைய திறமையால் பாடல் எழுதி பல பாடல்களைப் பாடிய ஆல்பமாக்கியவர் டீஜே. இவரின் 'முட்டு முட்டு என்ன முட்டு...', 'எனக்கொரு ஆசை...' போன்ற பல பாடல்கள் யூ-ட்யூபில் செம ஹிட்.

தற்போது இவருக்கு நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இந்தத் தகவலை டீஜே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். லண்டனில் வசிக்கும் இவர் 'அம்சனா' எனும் தமிழ்த் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

English summary
Many of the songs hit in youtube released by Teejay, who wrote the song and singing. Now he has got the chance to sing in the film 'Imaikkaa nodigal' which will be lead by Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil