சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்...வடிவேலுவின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காமெடியன்களில் ஒருவர் நடிகர் வடிவேலு.தனது நகைச்சுவையால் சிறியவர், பெரியவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் மனங்களையும் கவர்ந்தவர் வடிவேலு.

டைரக்டர் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 24 ம் புலிக்கேசி படத்தில் இருந்து விலகியதை அடுத்து அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார் வடிவேலு. இந்த பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

முடங்கிய கோலிவுட்

முடங்கிய கோலிவுட்

சுரஜ், மிஸ்கின் போன்ற டைரக்டர்களின் படங்களில் நடிக்க வடிவேலுவிடம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அனைத்து படங்களின் வேலைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே கொரோனாவால் முடங்கிப் போய் உள்ளது.

வடிவேலு விழிப்புணர்வு வீடியோ

இந்நிலையில் தனது படத்தில் நடித்த காமெடி, நிஜத்தில் நடந்து வருவதை யதார்த்தமாக, நகைச்சுவை கலந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோவாக வடிவேலு பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது பலராலும் பார்த்து, ரசிக்கப்பட்டு வருகிறது.

கடவுள் ரிலீஸ் செய்த படம்

கடவுள் ரிலீஸ் செய்த படம்

அந்த வீடியோவில் வடிவேலு, தற்போதுள்ள சூழலில் எந்த தயாரிப்பாளரும் படம் பண்ண தயாராக இல்லை. எந்த நடிகரும் நடிக்க தயாராக இல்லை. ஆனால் இந்த சமயத்தில் கொரோனா என்ற படத்தை கடவுள் ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்க வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருந்து பாருங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

கடவுளுக்கு தான் தெரியும்

கடவுளுக்கு தான் தெரியும்

ஹோம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தை கடவுளால் மட்டும் தான் தூக்க முடியும். மக்கள் எப்போது வெளியே வருவார்கள் என்பதும் அவருக்கும் மட்டும் தான் தெரியும். அதையும் அவர் தான் செய்ய வேண்டும். அதனால் இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டு அனைவரும் வீட்டிலேயே இருப்போம்.

சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்

சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்

சும்மாவே இருக்குறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியுமான்னு ஒரு படத்தில் நடித்திருப்பேன். அதை படமாக பார்த்து, காமெடியாக சிரித்திருக்கோம். ஆனால் கொரோனாவால் இன்று ஒவ்வொருவரும் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது காமெடி இப்போது நிஜ வாழ்க்கையில் நடக்கிறது.

யாரும் பயப்படாதீங்கள்

யாரும் பயப்படாதீங்கள்

யாரும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அரசு கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்காக பயப்படவோ, பதற்றம் அடையவோ வேண்டாம் என ரசிகர்களை வடிவேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X