»   »  அப்பாவின் விமர்சனங்களும் அறிவுரையும் எனக்கு பேருதவியாக உள்ளன! - ஸ்ருதிஹாசன்

அப்பாவின் விமர்சனங்களும் அறிவுரையும் எனக்கு பேருதவியாக உள்ளன! - ஸ்ருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னுடைய அப்பா சிறந்த விமர்சகர் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'பெஹன் ஹோகி தேரி'.

இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.

அப்பாவுக்காகவும் பள்ளி தோழர்களுக்காகவும்

அப்பாவுக்காகவும் பள்ளி தோழர்களுக்காகவும்

படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், "இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

சிறந்த விமர்சகர்

சிறந்த விமர்சகர்

படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட.

பாராட்டு

பாராட்டு

அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது," என்றார்.

சிறு ஓய்வு

சிறு ஓய்வு

முன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து கிடைத்த சிறிய ஓய்வில் சென்னைக்கு வந்து தன்னுடைய அப்பாவுடன் தங்கியிருந்தார்.

இசை ஆல்பம்

இசை ஆல்பம்

அடுத்து லண்டனுக்கு பறந்து சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இறதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

இந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actress Shruti Haasan, has been traveling all over the country promoting her film Behen Hogi Teri. The weekend after the film's release, Shruti hosted a Special screening of her film in Chennai for her father Kamal Haasan and some of her close childhood friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil