ட்விட்டரில் டிரென்டான 'மை டியர் தல அஜீத்'
சென்னை: ட்விட்டரில் மை டியர் தல அஜீத் என்பது தான் உலக அளவில் சில மணிநேரம் டிரென்டாகியுள்ளது.
ட்விட்டரில் அஜீத் ரசிகர்கள் திடீர் என்று அவரைப் பற்றி புகழ்ந்து ட்வீட் செய்யத் துவங்கினர். அஜீத்தை அவரது ரசிகர்கள் அன்பாக 'தல' என்று தான் அழைப்பார்கள். இதையடுத்து ட்விட்டரில் மை டியர் தல அஜீத் என்பது உலக அளவில் சில மணிநேரம் டிரென்ட் ஆனது.
அஜீத்தை புகழ்ந்து அவரது ரசிகர்கள் எழுதியவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

தல
சிலர் தான் அவரை அஜீத் என்பார்கள். மற்றவர்களுக்கு அவர் தல. மை டியர் தல அஜீத் என்று கணேஷ் நடராஜன் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

விசில்
மங்காத்தாவை பார்த்து விசில் அடித்து, கத்தியதில் தொண்டை வலி வந்துவிட்டது. இதையடுத்து விசில் வாங்கி அடித்தேன் என்று கணேஷ் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

தலவெறி
மை டியர் தல அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த குணம் படைத்தவர். ட்விட்டரில் இன்னும் ட்ரென்டாகிக் கொண்டிருக்கிறது. தலவெறி.

வெறுப்பு
கடின உழைப்பு, சுயநலமின்மையின் எடுத்துக்காட்டாக இருப்பதால் தான் தலயை பலருக்கு பிடிப்பதில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. லவ் மை டியர் தல என்று கார்த்தி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

ரிஸ்க்
இனி வரும் காலத்தில் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கவும் மை டியர் தல என்று விநாயக் என்பவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











