எங்க குடும்பமே சமந்தாவோட ஃபேன்... ஃபேம்லிமேன் 2 வை புகழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்
ஐதராபாத் : சமந்தா நடித்துள்ள வெப் சீரிசான ஃபேமிலி மேன் 2, அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சமந்தாவின் நடிப்பை பலரும் ஆஹா, ஓஹோ என பாராட்டி வருகின்றனர்.

ஆனால் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக இருப்பதாக ஃபேலிமேன் சீசன் 2 விற்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகிறது. இதனை உடனடியாக அமேசான் தளத்தில் இருந்து நீக்கும்படி கோரிக்கைகளை எழுப்பப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்நிலையில் ஃபேம்லிமேன் 2 வில் சமந்தாவின் நடிப்பை வெகுவாக புகழ்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களின் நடிப்பை விளக்கமாக பாராட்ட வார்த்தையே இல்லை. சமந்தாவிற்கு நான் தலை வணங்குகிறேன்.
நீங்கள் நெருப்பு பெண். ராஜி கேரக்டரை எவ்வளவு திறமையாக கொண்டு சென்றுள்ளீர்கள். எங்கள் குடும்பமே உங்களுக்கு ஃபேன் ஆகிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெப்சீரிசில் பிரியாமணி, ஷரீப் ஹாசிம், நீரஜ் மாதவ், கிஷோர் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிசில் வரும் கேரக்டர்களை வைத்து மீம்களும் அதிக அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











