»   »  என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தாருக்கு என் பாடல்களின் ராயல்டி கிடைக்கணும்: நா. முத்துக்குமார்

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தாருக்கு என் பாடல்களின் ராயல்டி கிடைக்கணும்: நா. முத்துக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் இறந்துவிட்டால் தன் பாடல்களின் ராயல்டி தன் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்று பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் தன்னிடம் தெரிவித்ததாக சக பாடல் ஆசிரியரான மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். 41 வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்ததால் திரையுலகம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளது.

அவரின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அவர் இறந்ததாக வேறு கூறப்படுகிறது.

முத்துக்குமார்

முத்துக்குமார்

முத்துக்குமாருக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர் பாடல் ஆசிரியரான மதன் கார்க்கி. அவர் முத்துக்குமார் பற்றி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான பாடல்கள் எழுதியவர் அவர் தான். அதில் பெரும்பாலான பாடல்கள் ஹிட் என்றார்.

எளிமை

எளிமை

முத்துக்குமார் தனது பாடல்களில் மிகவும் எளிதான வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தார். ஆனால் அந்த வார்த்தைகள் பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தின. கடந்த சில மாதங்களாக அவர் ஷங்கரின் 2.0 உள்பட பல படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் என்றார் மதன் கார்க்கி.

ராயல்டி

ராயல்டி

பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் முத்துக்குமாரும் ஒருவர். பாடல் ஆசிரியர்களுக்கு ராயல்டி வழங்காமல் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று மதன் தெரிவித்தார்.

மறைவுக்கு பிறகு

மறைவுக்கு பிறகு

ஒரு நாள் நான் இறந்த பிறகு என் பாடல்களின் ராயல்டி என் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்றார் முத்துக்குமார். அவரின் ஆசை நிறைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் மதன்.

English summary
Lyricist Na. Muthukumar once told fellow lyricist Madhan Karky that his family should get the royalties for his songs after his death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil