»   »  என் கணவரிடம் அப்பா ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் 'இது' தான்: ஐஸ்வர்யா தனுஷ்

என் கணவரிடம் அப்பா ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் 'இது' தான்: ஐஸ்வர்யா தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இன்னாரின் மருமகன் என்று இல்லாமல் தனுஷ் தன் முயற்சியால் பெரிய ஆளானது என் தந்தைக்கு மிகவும் பிடித்தது என்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா கூறுகையில்,

ஓவர் தான்

ஓவர் தான்

என் தந்தையின் நடிப்பு சில படங்களில் ஓவராகத் தான் இருக்கும். அவரின் மிகப் பெரிய விமர்சகர்களில் நானும் ஒருத்தி. அப்பா இந்த படம் கொஞ்சம் ஓவர் என்று கடுமையாக இல்லாமல் அமைதியாக நினைவூட்டிக் கொண்டே இருப்பேன்.

தனுஷ்

தனுஷ்

என் கணவர் தனுஷும், அப்பா ரஜினியும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளனர். சிறுவயதில் இருந்தே தனுஷ் என் தந்தையின் ரசிகர். இன்னாரின் மருமகன் என்று இல்லாமல் தனுஷ் தன் முயற்சியால் பெரிய ஆளானது என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.

மகன்கள்

மகன்கள்

என் மகன்கள் பிறரை போன்று சாதாரணமாக வாழத் தேவையானவற்றை செய்வேன். அனிமேஷன் படங்கள் தவிர அவர்கள் தனுஷ் அல்லது தாத்தா ரஜினியின் படங்களை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். என் மகன்களை விஞ்ஞானிகளாக்கிப் பார்க்க விரும்புகிறேன்.

இயக்குனர்

இயக்குனர்

சிறு வயதில் இருந்தே சினிமா பட இயக்குனராக வேண்டும் என விரும்பினேன். சமூக வலைதளங்களில் என் தந்தை பற்றி வரும் ஜோக்குகளை பார்த்து அவர் ரசித்து சிரிப்பார்.

English summary
Aishwarya Dhanush said that the fact that Dhanush made it big on his own and not because he is someone's son-in-law is something my father deeply admires.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil